வியாழன், அக்டோபர் 06, 2011

காட்டாற்று வெள்ளம் போல்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا {59} 


18:59. அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.
இஸ்ரேல் ஹைஃபாவில் டாமொன் சிறைக்கருகில் உள்ள கார்மல் மலைப்பகுதியில் திடீரென பிடித்த காட்டுத் தீ அசுர வேகத்தில் பரவிச்சென்று சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவிலான கிராமங்களை எரித்து சாம்பலாக்கி விட்டது.

மேற்படி கிராமங்களிலிருந்து சுமார் 12 ஆயிரம் பேர் மீட்பு படையினரால் வெளியேற்;றப்பட்டுள்ளனர்.

பொதுமக்களில் தீக்கிறையானோரின் எண்ணிக்கை தெரியவில்லை தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீ அணைப்பு யூதப் படையினரில் மட்டும் 42 பேர் தீயில்; கருகி இறந்ததாக செய்திகள் கூறுகிறது. 

தீப் பற்றிய 3 நிமிடத்திற்குள் அது 1500 மீட்டர் தூரம் வரை வெகுவேகமாக பரவிச்சென்றதால் இஸ்ரேலில் உள்ள அனைத்து தீ அணைப்பு நிலையங்களிலிருந்தும் ஏராளமான தீ அணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடிய வில்ல. அதனால் அது இன்னும் வேகமாக பிரவிச்சென்றதால் ரஷ்யா, சைப்ரஸ், க்ரீஸ், இத்தாலியின் உதவியை நாடினர்.   

இந்த ராட்சஷ தீ எப்பொழுது கட்டுக்குள் வரும் என்று உறுதியாக கூறமுடியாமல் விழிப் பிதுங்கி நின்றனர்.

ஹைஃபாவிலிருந்து டெல்அவிவ் செல்லும் பாதையை நெருங்கும்போது அப்பாதையே தீயை தடுக்கும் அரணாக மாறும் என்றும், அதுவும் முடியாவிட்டால் கடல் நீர் தீயை அணைத்துவிடும் என்றும் தீ அணைப்புத் துறையினர் தோராயமாகவேக் கூறிக்கொண்டிருந்தனர்.

கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் போல் இந்த காட்டுத் தீ ஹைஃபாவைக் கடந்து டெல்அவிவை அடையும் என்ற அச்சத்தால் ஆக்கிரப்பாளர்கள் உறைந்து போயே இருந்தனர்.  


மண்ணின் மைந்தர்களை விரட்டிஅடித்துவிட்டு அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி கள்ளஅரசாங்கம் உருவாக்கியப் பின் கடந்த 60 ஆண்டுகளில் இதுதான் பயங்கரமான முதல் தீ என்று வந்தேறி பிரதமர் நெதன்யாஹூகூறி கையைப் பிசைந்து கொன்டாராம்.

உலகம் முழுவதும் கடும்குளிரால் ஐஸ் கட்டிகளாக உறைந்து கொண்டிருந்த வேளையில் இஸ்ரேல் மட்டும் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருந்தது இதுப்போன்று கடந்த காலங்களில் இஸ்ரேலில் ஏற்பட்டதில்லை என்றும் இது வியப்பாக உள்ளது என்றும் உலக ஊடகங்கள் கூறின.

இறுதியாக பிற நாடுகளின் ராட்சஷ தீ அணைப்பு இயந்திரங்களைக் கொண்டே ஏராளமான பொருட் செலவில் தீயை அணைத்ததாக தகவல்கள் கூறுகிறது.

இவர்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறி விட்டதாக இவர்களின் ஊடகங்களும், இவர்களை ஆதரிப்பவர்களின் ஊடகங்களும் அவ்வப்பொழுது தம்பட்டம் அடித்துக் கொள்வதுண்டு.

ஆனால் திடீரென பற்றிக்கொண்ட இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவர்களின் தொழில்நுட்பம் உதவவில்லை.

இவர்கள் தீவிரவாத நுட்பத்தில் தான் முன்னேறி உள்ளனர் என்பதற்கு இந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போய் உலகை கூவி அழைத்தது இவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

ஏராளமான ஆலிவ் மரங்களை இந்த யூத தீவிரவாதிகள் பற்ற வைத்த தீக்கிறையாக்கி விட்டு அழுது தவித்த ஸாலிம் கிராம ஏழை விவசாயிகளன் அழுகுரல் அன்று ஒபாமாவுக்கு கேட்கவில்லை, இன்று இவர்களின் அழுகுரல் ஒபாமாவுக்கு கேட்டு நாங்கள் இருக்கிறோம் அழாதீர்கள் என்று ஆறுதல் கூறினாராம். 

எங்களிடம் ஏராளமான அணுகுண்டுகள் இருக்கின்றன எங்களை எவரும் அசைக்க முடியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களை இந்த நெருப்பு ஒரு உலுக்கு உலுக்கி விட்டது, இதைவிட பயங்கரமான சீற்றம் இறைவன் புறத்திலிருந்து வந்தால் இவர்களின் நிலை என்னவாக இருக்கும் ? இவர்களின் அணுகுண்டுகள் இறைவனின் கோபத்திலிருந்து இவர்களை காப்பாற்றுமா ? இவர்களுக்கு முன்சென்ற இவர்களின் வரம்பு மீறிய வம்சாவழியினரின் வரலாற்றை இவர்கள் படிக்க வேண்டாமா ?

18:59. அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்



கருத்துகள் இல்லை: